விஜய்யின் ஆட்சிக்கு ஏழாம்பொருத்தமாக மாறியுள்ள அர்லேகர்

Vijay Tamil nadu India TVK
By Dharu May 07, 2026 01:02 PM GMT
Report

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்காமல், ஆளுநர் முன்கூட்டியே பெரும்பான்மைக்கான ஆதாரங்களைக் கோருவது பா.ஜ.கவின் அரசியல் நெருக்கடியே என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்ற கருத்துகள் எழுந்துள்ளன. த.வெ.க ஆட்சி அமைக்க 118 இடங்கள் என்னும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஏனைய கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது.

ஏற்கனவே, 5 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி த.வெ.கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

'L போட்’போன்று செயற்படும் அரசாங்கம் : எதிரணி எம்பி விளாசல்

'L போட்’போன்று செயற்படும் அரசாங்கம் : எதிரணி எம்பி விளாசல்

3 கட்சிகளிடமும் ஆதரவு 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ / CPI) 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள் என 6 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

விஜய்யின் ஆட்சிக்கு ஏழாம்பொருத்தமாக மாறியுள்ள அர்லேகர் | Arlekar Who Obstructed Vijay Rule

இந்த 3 கட்சிகளிடமும் ஆதரவு கோரி த.வெ.க தலைவர் விஜய் தற்போது கடிதம் எழுதியுள்ளார். இதற்கிடையே, ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்த விஜய், ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை சமர்ப்பித்தார்.

எனினும், அதில் போதிய உறுப்பினர்களின் ஆதரவு இருப்பது குறித்த விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் அர்லேகர் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுவரை ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால், சென்னை நேரு உள் விளை​யாட்டு அரங்​கில் திட்டமிட்ட பதவியேற்பு விழா நடைபெறாமல் போயுள்ளது.

இதன்படி ஆளுநரின் இந்த முடிவுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதற்கு முன்னரும் இவ்வாறான அரசியல் சர்ச்சைகளும் ஆளுநருக்கு எதிராக அந்நாட்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் குறித்த வரலாற்று நிகழ்வுகள் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

தமிழ் கட்சிகள் ஒன்றிணைவு : சுயாதீனமாக செயற்படாத தமிழ் சட்டத்தரணிகள் பேரவை : கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

தமிழ் கட்சிகள் ஒன்றிணைவு : சுயாதீனமாக செயற்படாத தமிழ் சட்டத்தரணிகள் பேரவை : கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

பொம்மை - நபம் ரேபியா வழக்கு

எஸ்.ஆர். பொம்மை (1994) மற்றும் ராமேஸ்வர் பிரசாத் (2006) வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய சிறப்புமிக்க தீர்ப்புகளின்படி, ஒரு அரசின் பலத்தைப் பரிசோதிக்கும் ஒரே இடம் சட்டமன்றமே தவிர, ஆளுநர் மாளிகை அல்ல. ஆளுநருக்குத் தனிப்பட்ட முறையில் எம்.எல்.ஏ.க்களின்(தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர்கள்) எண்ணிக்கையைக் கணக்கிடும் அதிகாரம் கிடையாது.

விஜய்யின் ஆட்சிக்கு ஏழாம்பொருத்தமாக மாறியுள்ள அர்லேகர் | Arlekar Who Obstructed Vijay Rule

மேலும், 2016 நபம் ரேபியா வழக்கு மற்றும் 2020 சிவராஜ் சிங் சவுகான் வழக்குகளில் ஆளுநரின் அதிகார வரம்பு மிகக் குறுகியது என்பதையும், அவர் ஒரு அரசியல்வாதியாகச் செயல்படக் கூடாது என்பதையும் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

கோவா, மணிப்பூர் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆளுநரின் செயல்பாடுகள் ஒருதலைப்பட்சமாக இருந்தபோது உச்ச நீதிமன்றம் தலையிட்டு 24 மணி நேரத்திற்குள் வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட முன்னுதாரணங்கள் இருக்கும் நிலையில், தற்போது தமிழகத்திலும் ஆளுநர் மரபுகளை மீறி முட்டுக்கட்டை போடுவது ஜனநாயகப் படுகொலை என விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி வெளியிட்டுள்ள பதிவில், "ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம் மட்டுமே.

இதுகுறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவாக உள்ளன. தனிப்பெரும் கட்சியான தவெக தலைவர் விஜய் அவர்களை மக்கள் முதலமைச்சர் என்று முடிவுசெய்திருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பிற்கு குறுக்கே ஆளுநர் நிற்பது சரியல்ல. ஆளுநருக்கு இந்த அளவிற்கு அரசியலும், அரசியல் சாசன விதிகளும் தெரியும் என்று நம்புகிறேன்.

பாஜக ஆளுநர் மாளிகை வழியாக அரசியல் செய்வதை உடனே நிறுத்தவேண்டும். ஆளுநர் தவெக தலைவர் விஜய் அவர்களை உடனடியாக ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரியின் 15வது சட்டப்பேரவை கலைப்பு

புதுச்சேரியின் 15வது சட்டப்பேரவை கலைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
நன்றி நவிலல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு

14 Jun, 2026
நன்றி நவிலல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026