விடுதலைப் புலிகளின் நகை,பணத்தை மீட்க முயன்ற படைத் தரப்பினர் கைது
சிலாவத்துறை காவல் நிலையத்தை அண்டிய இடத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் பணம் மற்றும் நகைகளை மீட்பதற்காக குழி தோண்டிய சந்தேகத்தின் பேரில் கடற்படை வீரர் மற்றும் காவல்துறை சார்ஜன்ட் உட்பட சிலர் கைது செய்யப்பட்டதாக சிலாவத்துறை கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் தலைமையக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சிலாவத்துறை கடற்படையினரால்
சிலாவத்துறை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் அநுராதபுரம் காவல்துறைப் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கடற்படை சிப்பாய் மற்றும் காவல்துறை சார்ஜன்ட் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் வந்ததாக கூறப்படும் இடத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணைகளின் போது
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30-38 வயதுடைய நாவுல, மெனிக்தென மற்றும் அனுராதபுரத்தை சேர்ந்தவர்கள்.
கைது செய்யப்பட்ட மற்ற இரு சந்தேக நபர்களில் ஒருவர் சாரதி எனவும் மற்றையவர் தொழிலாளி எனவும் காவல்துறை விசாரணைகளின் போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |