போராளிகள் உயிர்த் தியாகம் செய்யத் தயாராகுங்கள்..! இராணுவ தலைமையகம் அழியும்: சரத் பொன்சேகா எச்சரிக்கை
மக்கள் மீது இராணுவம் தாக்குதல் நடாத்தினால் இராணுவ தலைமையகம் அழியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார்.
இணையத்தளம் ஒன்றில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் போராட்டம் வெற்றி பெற போராட்டக்காரர்கள் உயிர்த் தியாகம் செய்யத் தயாராக வேண்டும் எனவும், போராளிகள் சுடப்பட்டால் 20 முதல் 25 வரை சாகலாம் ஆனால் போராட்டம் நிற்காது என தெரிவித்தார்.
உயிர்த் தியாகம் செய்தவர்களை மாவீரர்களாக கொண்டாடுவார்கள்
அரசியலமைப்பின் பிரகாரம் போராடுவது சாத்தியமில்லை, அதற்கு வெளியில் சென்று இலக்குகளை வென்றெடுப்பதற்காக போராடவேண்டும்.
போராட்டத்தில் உயிர் தியாகம் செய்ய வேண்டும் என்றால் அதைச் செய்ய வேண்டும் அப்போது அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உயிர்த் தியாகம் செய்தவர்களை மாவீரர்களாக கொண்டாடுவார்கள்.
சர்வதேச தலையீடுகளால் வான் வழியாக வந்து இராணுவத்தினரை தாக்கி தலைமையகத்தை கூட அழித்துவிடலாம். இதற்கு மத்திய கிழக்கு நாடுகள் நல்ல உதாரணங்கள் ஆகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
போராட்டத்திற்கு பல்வேறு குழுக்கள்
எனவே போராட்ட காரர்களை சுடுவது போன்ற உத்தரவுகளை இராணுவத்தினர் பின்பற்றக் கூடாது என மீண்டும் இராணுவத்திடம் வலியுறுத்துவதுடன் அரசியலமைப்பை இராணுவத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.
மேலும், போராட்டத்திற்கு பல்வேறு குழுக்கள் இருக்கின்றன, பணம் பெறும் குழுக்கள், இரவில் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு காலையில் போராட்ட களத்தில் இருக்கும் குழுக்கள் என்பன இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
YOU MAY LIKE THIS