அதிபர் ரணிலின் நெற்றிக்கு நேரே பொன்சேகா தெரிவித்த விடயம்
சர்வகட்சி அரசாங்கம் பயனுள்ள விடயம் அல்ல
தற்போதுள்ள பிரச்சினைக்கு சர்வகட்சி அரசாங்கத்தை தீர்வாக பார்க்கவில்லை எனவும் பொன்சேகா தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து மக்களின் பிரதான கோரிக்கையாக ஊழலை ஒழிக்க வேண்டுமென தெரிவித்த பொன்சேகா, அதில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும், ஊழலற்ற நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பு அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகள்
தற்போது நாடும் மக்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகள் காணப்பட வேண்டியது அவசியமானது எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளது.
2. 90 minute discussion was positive. @sajithpremadasa said he came to the meeting with a “positive mindset” and wished to see how best we could all work together through Parliament. Wanted lifting of emergency law and release aragalaya prisoners Said to stop intimidation and
— Harsha de Silva (@HarshadeSilvaMP) August 5, 2022
இதன்போது சர்வகட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா டுவிட்டர் பதிவொன்றினையிட்டு தெரிவித்துள்ளார்.
