மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்தில் இராணுவத்தின் கைவரிசை.!

Sri Lanka Army Sri Lankan Tamils Jaffna Sri Lankan Peoples Sonnalum Kuttram
By Theepan Feb 22, 2026 01:10 PM GMT
Report

மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு, இராணுவத்தால் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.

மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. 

அந்த ஆலயத்தில் வருடாந்தத் திருவிழாத் திருப்பலி கடந்த 2ஆம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இதற்கு அரசாங்கத்திடமும் இராணுவத்திடமும் அனுமதிகோரி மயிலிட்டி மீள்குடியேற்றச் சங்கத்தின் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட பகுதியைப் பார்வையிட்டதுடன், அங்கு வழிபாடுகளை நடத்த அனுமதிக்குமாறு இராணுவத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். 

ஆனால், வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இராணுவத்தால் தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்த வருடத் திருவிழாத் திருப்பலி இடம்பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கும், ஆளுநருக்கும், அமைச்சர் சந்திரசேகருக்கும், மாவட்டச் செயலருக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்ட போதிலும் இராணுவத்தின் நடவடிக்கையில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்தில் திருவிழா வழிபாடுகளை மேற்கொள்வதற்கு யாழ். மறைமாவட்டமும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 

இதன்போது, ஆலயத்துக்குள் வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என்றும், ஆலய வளாகத்துக்கு வெளியில் வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதிப்பதாகவும் இராணுவத்தால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. 

அவ்வாறான முறையில் வழிபாட்டை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணம் ஆயர் இல்லம் மறுப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்தின் இந்த வருடத் திருவிழா தடைப்பட்டுள்ளது.

இதையடுத்து, இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எதிர்ப்பை மீறி நாமலின் பிரித்தானிய விஜயம் ஆரம்பம்

எதிர்ப்பை மீறி நாமலின் பிரித்தானிய விஜயம் ஆரம்பம்

கொக்குவில் இந்து கல்லூரி மாணவர் அனுமதியில் சுற்றுநிருப மீறல் : மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு!

கொக்குவில் இந்து கல்லூரி மாணவர் அனுமதியில் சுற்றுநிருப மீறல் : மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு!

ஆட்டோ சாரதி கடத்தப்பட்டு படுகொலை : இரவு நேரம் நடந்த பயங்கரம்

ஆட்டோ சாரதி கடத்தப்பட்டு படுகொலை : இரவு நேரம் நடந்த பயங்கரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...  
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026