நிரந்தரமாக ஒழித்துக்காட்டுவோம் - இராணுவத் தளபதி கொடுத்த பதிலடி
கொரோனா தடுப்பூசி செயல்முறைக்கு இராணுவ உதவியை நாடியதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இராணுவத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.
எனினும் அவரும் நாரஹேன்பிட்டியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் இருந்து தனது அளவைப் பெற்றார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
நாடு முழுவதும் ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்படும் தடுப்பூசி செயல்முறையை ஒரு நபர் விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
எவ்வாறாயினும், இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பது பாதுகாப்புப் படைத் தளபதி மற்றும் இராணுவத் தளபதி என்ற முறையில் தனது கடமையும் பொறுப்பும் என்றும் அவர் கூறினார்.
இராணுவத் தளபதி நேற்று கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
நாரஹேன்பிட்டி இராணுவ மருத்துவமனையில் இருந்து தடுப்பூசி பெற்ற பிறகு, “தடுப்பூசி போரில் இராணுவவீரர்களை ஈடுபடுத்துவது தவறு” என்று ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு கூறுவது எந்த வகையில் நியாயமானது? இதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று அவர் கூறினார்.
கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முடியாது என்று சிலர் கூறினாலும், சுகாதார துறையின் உதவியுடன் அதை வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடிந்தது.
மக்களின் ஆதரவுடன், கொரோனா தொற்றுநோய் நாட்டிலிருந்து நிரந்தரமாக ஒழிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.