கொழும்பில் வெடித்த பதற்றம்! இரவோடு இரவாக “கோட்டா கோ கம” தகர்ப்பு ! செயற்பாட்டாளர்கள் கைது - நேரடி ரிப்போர்ட்

Sri Lanka Army Colombo Galle Face Protest SL Protest Sri Lanka Anti-Govt Protest
By Vanan Jul 22, 2022 01:36 AM GMT
Report

ஆறாம் இணைப்பு

இராணுவத்தினரின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ள இளைஞர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியிலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேறாத வண்ணம் கோட்டா கோ கம பகுதியை சுற்றியுள்ள அனைத்து பாதைகளும் மூடப்பட்டுள்ளது.

கொழும்பில் வெடித்த பதற்றம்! இரவோடு இரவாக “கோட்டா கோ கம” தகர்ப்பு ! செயற்பாட்டாளர்கள்  கைது - நேரடி ரிப்போர்ட் | Army Safety Secretariat Of The President Sri Lanka

இந்நிலையில்,கோட்டா கோ கம பகுதிக்கு தற்போது காவல்துறை  உயரதிகாரிகளின் பாதுகாப்புடன் துப்பரவுப் பணியாளர்கள் அழைத்து வரப்பட்டு எஞ்சியிருக்கும் கூடாரங்கள் மற்றும் தடயங்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் வெடித்த பதற்றம்! இரவோடு இரவாக “கோட்டா கோ கம” தகர்ப்பு ! செயற்பாட்டாளர்கள்  கைது - நேரடி ரிப்போர்ட் | Army Safety Secretariat Of The President Sri Lanka

ஐந்தாம் இணைப்பு

அதிபர் செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம போராட்டக்களம் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது போராட்டக்களத்திலிருந்த சட்டத்தரணி ஒருவர் உட்பட 10 போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், காலிமுகத்திடல் பகுதிக்கு சிவில் உடையணிந்த இராணுவத்தினர் நூற்றுக்கணக்கானோர் சற்று முன்னர் வருகை தந்துள்ளதாக  போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

நான்காம் இணைப்பு

கொழும்பு - காலிமுகத்திடல் பகுதிக்குச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளதுடன், காலிமுகத்திடல் பிரதேசத்திற்குச் செல்லக்கூடிய அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு முற்றாக இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

காலி வீதியில் கொள்ளுப்பிட்டி சந்தியின் சுற்றுவட்டத்தில் இருந்து பாதை மூடப்பட்டுள்ளதுடன், ஷங்கிரிலா ஹோட்டல் அருகில் பாலதக்‌ஷ மாவத்தையும் குறுக்காக மறிக்கப்பட்டுள்ளது.

மறுபுறத்தில் சைத்திய வீதி, லோட்டஸ் வீதி என்பனவும் குறுக்காக மறிக்கப்பட்டு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காலி முகத்திடல் பிரதேசத்தை நோக்கிச் செல்ல எந்தவொரு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுத்துள்ளதுடன், செல்ல முற்படும் சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

மூன்றாம் இணைப்பு

போராட்டக்காரர்கள் வசமிருந்த சில பகுதிகளை இராணுவம், காவல்துறை இணைந்து கைப்பற்றியுள்ளதாகவும் மூன்று போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் மீது இராணுவத்தினர் கொடூரமான முறையில் தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், அவர்களை இராணுவத்தினர் அழைத்து சென்றுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராட்டக்காரர்கள் விண்ணதிரும் கோசங்களுடன் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் இராணுவத்திற்கு பதிலாக “ அவண்காட்” உறுப்பினர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், முழுமையாக முகங்களை மூடியிருப்பதால் அடையாளம் காண்பதில் சிக்கல் தன்மை இருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவிக்கன்றனர்.

கொழும்பில் வெடித்த பதற்றம்! இரவோடு இரவாக “கோட்டா கோ கம” தகர்ப்பு ! செயற்பாட்டாளர்கள்  கைது - நேரடி ரிப்போர்ட் | Army Safety Secretariat Of The President Sri Lanka

இரண்டாம் இணைப்பு

கொழும்பு - காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள “கோட்டா கோ கம” போராட்டக்காரர்களை நள்ளிரவு வேளை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக போராட்டக்காரர்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் கடும் மோதல் நிலவி வருகின்றது.

கொழும்பில் வெடித்த பதற்றம்! இரவோடு இரவாக “கோட்டா கோ கம” தகர்ப்பு ! செயற்பாட்டாளர்கள்  கைது - நேரடி ரிப்போர்ட் | Army Safety Secretariat Of The President Sri Lanka

கொழும்பில் வெடித்த பதற்றம்! இரவோடு இரவாக “கோட்டா கோ கம” தகர்ப்பு ! செயற்பாட்டாளர்கள்  கைது - நேரடி ரிப்போர்ட் | Army Safety Secretariat Of The President Sri Lanka

கொழும்பில் வெடித்த பதற்றம்! இரவோடு இரவாக “கோட்டா கோ கம” தகர்ப்பு ! செயற்பாட்டாளர்கள்  கைது - நேரடி ரிப்போர்ட் | Army Safety Secretariat Of The President Sri Lanka

முதலாம் இணைப்பு

கொழும்பில் உள்ள சிறிலங்கா அதிபர் செயலகத்திற்கு நள்ளிரவில் திடீரென பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருற்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சற்றுமுன் திடீரென ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு பிரிவினர் நூற்றுக்கணக்கானோர் அதிபர் செயலகத்திற்குள் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

கொழும்பில் வெடித்த பதற்றம்! இரவோடு இரவாக “கோட்டா கோ கம” தகர்ப்பு ! செயற்பாட்டாளர்கள்  கைது - நேரடி ரிப்போர்ட் | Army Safety Secretariat Of The President Sri Lanka

இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினரே இவ்வாறு களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் பதற்றம் நிலவி வருவதுடன், பாதுகாப்பு படை குவிப்புக்கப்பட்டு வீதிகள் மூடப்பட்டுள்ளது.

GalleryGallery
ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026