படையினரைப் பாதுகாக்கப் புதிய சட்டம்! அமெரிக்காவைப் பின்பற்றும் ஸ்ரீலங்கா
srilanka
army
By Vasanth
படையினருக்கு சர்வதேச விடுபாட்டுரிமையை வழங்கும் சட்டங்களின் மூலம் அவர்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கல்வியமைச்சின் ஊடக செயலாளர் புத்திக விக்கிரமரட்ண தெரிவித்துள்ளதாக, தென்னிலங்கை ஆங்கில நாளிதழ் ஒன்றினைச் சுட்டிக்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. நாட்டிற்கு வெளியே உள்ள அமைப்புகள் படையினரை விசாரணைக்கு உட்படுத்துவதை அனுமதிக்காத விதத்தில் சட்டங்கள் உருவாக்கப்படும்.
தற்போதைய சட்டங்கள் படையினரை சர்வதேச விசாரணைகளில் இருந்து பாதுகாப்பதற்கான வலுவை கொண்டிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் இந்த விடயத்தில் அரசாங்கம் அமெரிக்காவின் உதாரணத்தை பின்பற்ற முயல்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்டங்கள் குறித்து கல்வியமைச்சரும் சில நாட்களிற்கு முன்னர் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.