வருடாந்தம் 25 ஆயிரம் பேரை ஊனமாக்கும் வீதி விபத்துகள்
Sri Lanka
Accident
Death
By Sumithiran
வீதி விபத்துகளால் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 25,000 பேர் கடுமையான, நீண்டகால காயங்களுக்கு ஆளாகின்றனர் என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
2025 ஆம் ஆண்டுக்கான தேசிய விபத்து மாநாடு நடைபெறுவதற்கு முன்னதாக இது தெரியவந்துள்ளது.
நாளாந்தம் வீதி விபத்துக்களால் உயிரிழப்பவர்கள்
தேசிய விபத்து செயலகத்தின் கூற்றுப்படி, நாடு முழுவதும் வீதி விபத்துகளில் ஒவ்வொரு நாளும் ஆறு முதல் எட்டு பேர் இறக்கின்றனர், அதே நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் விபத்து தொடர்பான காயங்களுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.
"நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு (SDGs) இணங்க, 2020 ஆம் ஆண்டு நிலைகளுடன் ஒப்பிடும்போது, 2030 ஆம் ஆண்டுக்குள் வீதி விபத்து இறப்புகளை 50% குறைக்க இலங்கை இலக்கு வைத்துள்ளது" என்று செயலகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி