திருகோணமலையில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள்!
Trincomalee
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Abi
திருகோணமலை மாவட்டத்தில் சேருநுவர காவல் பிரிவிற்கு உட்பட்ட மாவிலாறு பகுதியில் வெடிக்காத நிலையில் , 61 ரக மோட்டார் குண்டுகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளது.
மாவிலாறு குளத்தின் இன்று (28.03.2026) புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் இந்த மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், நீதிமன்ற அனுமதியைப் பெற்று குறித்த மோட்டார் குண்டுகளை விசேட அதிரடிப்படையின் ஊடாக செயலிழக்கச் செய்யவதற்கான மேலதிக ஏற்பாடுகளை சேருநுவர காவல் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்