நட்சத்திர விடுதியில் தங்கி பணம் செலுத்தாமல் தலைமறைவான பிக்கு!
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
By pavan
கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் 18 நாட்களாக தங்கியிருந்து பணம் செலுத்தாமல் தப்பிச் சென்ற பிக்கு ஒருவர் மகியங்கனை பிரதேசத்திலுள்ள விகாரையில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிக்கு ஓகஸ்ட் 31 முதல் 18 நாட்கள் விடுதியில் தங்கியிருந்தார் என்பதுடன் அதனுடைய கட்டணம் 527,820 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டணத்தைச் செலுத்தாமல் நோய்வாய்ப்பட்டதாகக் கூறி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் நுழைந்த அவர், உரிய தொகையை செலுத்துவதாக விடுதியில் தெரிவித்துள்ளார்.
காவல்நிலையத்தில் முறைப்பாடு
ஆனால் பணத்தை வழங்காததால் குறித்த விடுதி நிர்வாகம் காவல்நிலையத்தில் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா

3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்