கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான பிரதி காவல்துறைமா அதிபர் பயணித்த வாகனம்
Sri Lanka Police
Kilinochchi
Northern Province of Sri Lanka
By Sathangani
வடக்கு மாகாண பிரதி காவல்துறைமா அதிபர் பயணித்த வாகனம் கிளிநொச்சியில் (Kilinochchi) மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பரந்தன் முல்லை வீதியின் இரண்டாவது மைல்கல் பகுதியில் இன்று (01) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கட்டாக்காலி மாடுகள் திடிரென வீதியை குறுக்கே சென்றமையால் பிரதி காவல்துறைமா அதிபர் பயணித்த வாகனம் மாட்டுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.
திறப்பு விழாவிற்கு சென்ற போது விபத்து
குறித்த வாகனத்தில் இரண்டு மாடுகள் மோதுண்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வடக்கு மாகாண பிரதி காவல்துறை மா அதிபர் தருமபுரம் காவல் நிலையத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் தொடர்பான அலுவலகம் திறந்து வைப்பதற்கு சென்றபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்