நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால்! தமிழர்களின் நிலை...!
Parliament of Sri Lanka
Gajendrakumar Ponnambalam
Shanakiyan Rasamanickam
By Vanan
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைதினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வன்மையாக கண்டித்துள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் தனது கண்டனத்தை பதிவுசெய்துள்ளார்.
"இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறிய செயல்பாடாகும்.
ஓர் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்தக் கதி எனில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நிலைமையினை இவ்வளவு காலம் அவர்கள் அனுபவிப்பதனை யோசித்து பாருங்கள்.
கொள்கைகள் வேறுபடினும் என்றும் அநீதிக்காக எமது குரல் ஒலிக்கும்.
இவ் அநீதி சம்பந்தமாக குரல் கொடுக்க வேண்டிய மற்றைய உறுப்பினர்களின் மௌனம் சொல்வது என்ன..? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற உரை

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்