நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரிற்கு சரீர பிணை - கிளிநொச்சி நீதிமன்று அதிரடி..!

Sri Lanka Police Gajendrakumar Ponnambalam Sri Lanka
By Kiruththikan Jun 07, 2023 01:12 PM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report

நான்காம் இணைப்பு 

கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றக்கு அழைத்து செல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி காவல் நிலையத்திலிருந்து நீதிமன்றத்திற்கு காவல் நிலைய பொறுப்பதிகாரியின் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு சரீர பிணை வழங்கப்பட்டுள்ளது.

இதன் போது, குற்றம் சுமத்தப்பட்ட தரப்பே தன்னை விசாரித்து நீதி வழங்குவது முரணானது என்பது நிருபணமாகியுள்ளதாக பிணையில் விடுதலையான பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரிற்கு சரீர பிணை - கிளிநொச்சி நீதிமன்று அதிரடி..! | Gajendrakumar Mp In Colombo Arrested Promptly

மூன்றாம் இணைப்பு 

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை விடுவிக்க கோரி சற்றுமுன் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி காவல் நிலையத்தின் முன் இன்றையதினம்(07.06.2023) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கட்சி ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள், வாய்களில் கருப்பு துணிகளை கட்டி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இரண்டாம் இணைப்பு

இன்று காலை கொழும்பில் கைதுசெய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்றுமுன்னர் கிளிநொச்சி காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டார்.

கிளிநொச்சி காவல் நிலையத்தில் அவருக்கான விசாரணைகள் தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரிற்கு சரீர பிணை - கிளிநொச்சி நீதிமன்று அதிரடி..! | Gajendrakumar Mp In Colombo Arrested Promptly

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரிற்கு சரீர பிணை - கிளிநொச்சி நீதிமன்று அதிரடி..! | Gajendrakumar Mp In Colombo Arrested Promptly

முதலாம் இணைப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை கொழும்பில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் மருதங்கேணியில் காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் காவல்துறையினருடன் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

மருதங்கேணி காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட போதும் அவர் முன்னிலையாகாத நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.


வெளிநாட்டு பயணத் தடை

gajendrakumar arrested

மேற்குறித்த குற்றச்சாட்டுகளின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தால் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டது.

காவல்துறை நிலையத்தில் அவர் முன்னிலையானால் வெளிநாட்டு பயணத் தடை நீக்கப்படும் என்றும் மன்று சுட்டிக்காட்டி இந்தக் கட்டளையை நேற்று வழங்கியது.

மேலும், இதே குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இருவர் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்ப்பு 

"என்னை கைது செய்வதற்கான பிடியாணையைக் காண்பியுங்கள், நான் கைது செய்யப்படுவதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும்."

இவ்வாறு, இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்வதற்கு காவல்துறையினர் அவரது இல்லத்திற்கு சென்ற போது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து காவல்துறையினருடன் முரண்பட்ட அவர்,

நான் இன்று நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற வரப்பிரசாதம் தொடர்பில் பேசுவதற்கு தயாராக இருக்கிறேன், எனக்கு சபாநாயகர் அறிவித்திருக்கிறார் .

என்னை நாடாளுமன்றத்திற்கு அழைத்து செல்லுங்கள், நான் அங்கு எனது கடமையை செய்ய வேண்டும்.

நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற சிறப்புரிமை தொடர்பிலான எனது பிரேரணையை சமர்ப்பித்த பின்னர், நீங்கள் என்னிடம் வாக்குமூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

என்னுடைய கடமைகளை முடித்து விட்டு காவல்நிலையத்திற்கு சமூகமளிக்குமாறு நேற்றையதினம் இரவு கடிதம் அனுப்பி காவல்துறையினர் என்னிடம் கூறி இருந்தார்கள்.

நேற்றையதினம் இரவு அப்படியான ஒரு கடிதத்தை அனுப்பி விட்டு, இன்று காலை ஆறு மணிக்கு வாக்குமூலம் வழங்க வேண்டும் என வந்திருக்கின்றீர்கள்.


நாடாளுமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னர், எதிர்வரும் 12 ம் திகதி வாக்குமூலம் வழங்குவேன் என எழுத்துமூலம் அறிவித்துள்ளேன்.

இவ்வாறு எழுத்துமூலம் அறிவித்தல் வழங்கியும், அதனை கருத்தில் கொள்ளாமல் நாளை காலை 10 மணிக்கு காவல்நிலையத்திற்கு வந்து வாக்குமூலம் வழங்க வேண்டும் என நேற்றிரவு கடிதம் அனுப்பி இருக்கின்றீர்கள்.

இன்றைய தினம் 10 மணிக்கு மருதங்கேணி காவல்நிலையத்திற்கு வாக்குமூலம் வழங்க வருமாறு கடிதம் அனுப்பிவிட்டு, காலை 6 மணிக்கு வாக்குமூலம் வழங்க வேண்டும் என வந்து நிற்கிறார்கள்.

சிங்கள மக்களுடன் எங்களுக்கு எந்தவித பிரச்னையும் இல்லை, ஆனால் சிங்கள மக்களின் பெயரில் இவர்கள் செய்கின்ற அராஜகத்தை சிங்கள மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்." என தனது எதிர்ப்பை வெளியிட்டார்.

நேற்றைய கருத்து 

gajendrakumar said

எனது தந்தையை சுட்டுக்கொன்றபோதே ஓடியொழியாத நான் தற்போது நாட்டை விட்டு ஓடியொழிய எந்த தேவையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.

வெளிநாட்டு பயணத்தடை தொடர்பாக நேற்றையதினம் பிரத்தியேக செய்தி சேவை ஒன்றிற்கு வழங்கிய விசேட நேர்காணலில் கலந்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
நன்றி நவிலல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா

09 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, கிருலப்பனை, பரிஸ், France, Scarborough, Canada

26 Jun, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, கொழும்பு

12 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா

14 Jul, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025