பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடைய நபர் கைது
srilanka
police
underworld
By MKkamshan
பாதாள உலக குழுவுடன் தொடர்புடைய நபர் ஒருவரை நேற்று இரவு கைது செய்ததாக உப்புவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.
திருகோணமலை உப்புவெளி காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட தேவா நகர் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டவரிடம் இருந்து கைகுண்டு மற்றும் வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் கடந்த மாதம் குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வுச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர் எனவும் தேவா நகர் பிரதேசத்தில் இடம்பெறும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.