டயானா கமகேவிற்கு பிடியாணை : நீதிமன்றம் உத்தரவு
Colombo
Department of Immigration & Emigration
Law and Order
Diana Gamage
By Sathangani
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு (Diana Gamage) கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள அமைச்சர் டயானா கமகே விசாரணைக்கு முன்னிலையாகத் தவறியதால், அவரைக் கைது செய்யுமாறு நீதின்றத்தால் இன்று (21) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
நீதிமன்றில் முன்னிலையாகவில்லை
இதன்போது பிரதிவாதி நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன் பிரதிவாதியான டயானா கமகேவின் பிணையாளர்களுக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்