இளைஞர் மீது தாக்குதல்:பிரபல ஆசிரியரான டீச்சர் அம்மாவை கைது செய்ய உத்தரவு
5ம் ஆண்டு புலமைப்பரிசில் மேலதிக வகுப்புக்களை நடத்தும் பிரபல ஆசிரியரான டீச்சர் அம்மா’ என அழைக்கப்படும் ஹயேஷிகா பெர்னான்டோவினால் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் குறித்த ஆசிரியரை கைதுசெய்யுமாறு நீர்கொழும்பு நீதவான் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் சிகிச்சைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியர் தலைமறைவு கணவர் மற்றும் முகாமையாளர் கைது
சம்பவத்தையடுத்து ஹயேஷிகா பெர்னான்டோ தலைமறைவாகியுள்ளதுடன் அவரது கணவர் மற்றும் முகாமையாளர் இருவரும் கட்டான காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
நீதிமன்றம் உத்தரவு
சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான ஹயேஷிகா பெர்னான்டோவை கைதுசெய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு நீதவான் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
