எஸ்.ரீ.எவ்பினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் - பலகோடி பெறுமதியான வலம்புரி சங்குடன் ஒருவர் கைது
Police
Arrest
SriLanka
Valampuri sangu
By Chanakyan
சுற்றி வளைப்பின் பொது இரு வலம்புரி சங்குகள் மற்றும் முத்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ரிதிகம பொலிஸ் பிரிவில் ரம்படகல்ல பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையின் குருணாகலை முகாமினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற் காள்ளப்பட்டுள்ளது.
இதன்போதே ரிதிகம பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் ரிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவகின்றனர்.