இரகசியமாக வளர்க்கப்பட்ட கஞ்சா செடி - கைதான குற்றவாளிக்கு விளக்கமறியல்
திருகோணமலை-ரொட்டவெவ பகுதியில் இரகசியமாக ஐந்து கஞ்சா செடிகளை வீட்டில் வளர்த்து வந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் திருகோணமலை-ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த முகம்மத் ரபீக் நிஸாம் (34வயது) என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
குறித்த குற்றசெயலுடன் தொடர்புடைய சந்தேக நபரை எதிர்வரும் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரகசிய தகவல்
திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேல் முன்னிலையில் குறித்த சந்தேக நபரை முன்னிலைபடுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வீட்டுக்குள் கஞ்சா செடியை வளர்த்து வருவதாக காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரை கைது செய்ததாகவும் அவரிடம் இருந்து ஐந்து கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
