31 வருடங்களுக்கு முன் நடந்த கொலை..! சந்தேகநபர் கைது
கொலை
1991ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1991ஆம் ஆண்டு பாணந்துறையில் வசித்து வந்த மஹரகம நாவின்ன பகுதியைச் சேர்ந்த ஒருவரும் அவரது மகனும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த 29ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தினால் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொலையின் பின்னணி

இதேவேளை, விசாரணைகளின் போது, பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த அறிக்கையின்படி, கொலை செய்யப்பட்ட நபர் மற்றும் கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட குழுவொன்று விருந்தொன்றில் மது அருந்திக் கொண்டிருந்த போது, பாணந்துறையைச் சேர்ந்த நபர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
பின்னர் சடலம் பிலியந்தலை, தம்பேவில் உள்ள பொல்கொட ஏரியை அண்டிய குழியில் புதைக்கப்படுள்ளது.