கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்! கேள்வி எழுப்பும் தமிழர் தரப்புகள்
கொழும்பில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டிருப்பதான செய்தி ஒரு சதி நடவடிக்கை என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சில தமிழர் தரப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.
தற்போதைய அரசாங்கத்தின் ஈஸ்ரர் குண்டுத்தாக்குதல் விசாரணைகள் ஒரு இறுக்கமான முடிவை, சிறிலங்காவின் ஆயுத குழுக்களுக்கும் அரச இராணுவ புலனாய்வாளர்களுக்கும் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் புலிகளின் பெயரை வைத்து ஒரு மடைமாற்றல் நிகழ்வையும் அல்லது எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலையிலிருக்கும் சுரேஸ் சாலேவை காப்பாற்றுவதற்கான ஒரு தாக்குதல் திட்டமாக கூட இருக்கலாம் என்றும் புணர்வாழ்வளிக்கப்பட்ட போராளில் சிலர் வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் கொழும்பில் கைது செய்யப்பட்டவர் தொடர்பில் இதுவரை மேலதிக தகவல்கள் வெளிவராத நிலையில் அதன் முக்கிய விடயங்களை விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் இன்றைய அதிர்வு...
