தடுப்பூசியை தவிர்த்து அட்டை பெற முயற்சித்த மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது
arrest
police
corona vaccine
By Sumithiran
இலங்கையில் கொரோனா தொற்றை விரட்டியடிக்கும் வகையில் மிகவும் சேகமாக தடுப்பூசி வழங்கும் செய்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்படும்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக தடுப்பூசி அட்டையும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தடுப்பூசி நிலையத்திற்கு வந்து தடுப்பூசியைப் பெறாமல் பதிவுசெய்யப்பட்ட தடுப்பூசி அட்டைகளை மாத்திரம் பெறமுயற்சித்த பெண்கள் மூவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை பகல் இடம்பெற்றுள்ளது.
காலி – சங்கமித்தா வித்தியாலயத்தில் தடுப்பூசி நிலையம் உள்ளது. அங்கு சென்ற குறித்த சந்தேக நபர்கள், தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாமல் அதுசார்ந்துவழங்கப்படுகின்ற தடுப்பூசி அட்டைகளை மாத்திரம் பெற முயற்சித்த நிலையில் காலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்