மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம்: பல்கலை மாணவர்கள் விடுதலை
Batticaloa
University of Jaffna
Eastern Province
By Laksi
மயிலத்தமடு - மாதவனை போராட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தீர்ப்பினை ஏறாவூர் நீதிமன்றம் இன்று (03.06.2024) வழங்கியுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை
மாதவணை மேய்ச்சல்தரை ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராட்டமொன்றினை மேற்கொண்டிருந்த யாழ்ப்பாணம் (Jaffna) மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக (Eastern University) மாணவர்கள் ஆறு பேர் கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 05ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், காவல்துறையினர் போதிய சாட்சியங்களை முன்வைக்கத் தவறியமை, குற்றப்பத்திரிகையில் காணப்பட்ட முரண்பாடு மற்றும் குற்றச்சாட்டுக்களை முன்கொண்டு செல்வதற்கான எவ்வித முகாந்தரங்களும் இல்லை எனும் அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்