பல்கலைக்கு தெரிவான மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு
பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதியான மாணவர்களுக்கான கையேடு வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) வின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க(Sampath Amaratunga) தெரிவித்துள்ளார்.
அதன்படி, 269,613 பரீட்சார்த்திகள் க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றியிருந்தனர், இதில் 173,444 மாணவர்கள் 2024 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான அடிப்படைத் தகுதிகளை பூர்த்தி செய்துள்ளனர்.
அதிகாரபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து
2023 (2024) க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை ஜனவரி 4, 2024 இல் நடைபெற்றது, அதன் முடிவுகள் மே 31, 2024 அன்று வெளியிடப்பட்டன.
மாணவர்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரபூர்வ இணையதளமான www.ugc.ac.lk இல் உள்நுழைந்து மூன்று மொழிகளில் கிடைக்கும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம்.
சட்டபூர்வமாக தடை
மாணவர்களின் கையேடுகளை ஒன்லைனில் தவிர புத்தகக் கடைகளில் பெற வாய்ப்பில்லை 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு செல்லுபடியாகும் பல்கலைக்கழக சேர்க்கை கையேடுகள் இலங்கையின் காப்புரிமை சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த கையேட்டின் உள்ளடக்கங்களை மாற்றுவது அல்லது எந்த வணிக நோக்கத்திற்காகவும் அச்சிடுவது, கையேட்டை வெளியிடுவது மற்றும் விநியோகிப்பது அல்லது கூறப்பட்ட செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்ய உதவுவது சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |