வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கைவிலங்குடன் தொடர்ந்தும் சிகிச்சை
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரும் கைவிலங்குகளுடன் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிக்சை பெற்று வருகின்றனர்.
மகாசிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் மேற்கொண்டதாக சட்டத்தரணிகள் நேற்று முன்தினம் (09) நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
கைவிலங்குடன் சிகிச்சை
இதனையடுத்து நேற்று (10) நீதிமன்றின் உத்தரவுக்கமைய குறித்த 8 பேரையும் வவுனியா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அழைத்துச் சென்றிருந்தனர்.
இதன்போது குறித்த 8 பேரினதும் உடல் நிலையைக் கருத்திற்கொண்டு அவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கைவிலங்குடன் அவர்கள் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |