நாட்டில் தொடரும் கைதுகள்! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
Corona
Police
People
Arrest
SriLanka
By Chanakyan
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 368 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவற்றில் அதிகளவான கைதுகள் குளியாபிட்டியவில் இடம்பெற்றுள்ளது. அதன்படி அங்கு 117 பேரும், கண்டியில் 51 பேரும், கம்பளையில் 31 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் சுமார் 50,750 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் மேல் மாகாணத்தின் 14 நுழைவு வாயில்களில் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி நுழைய முயன்ற 338 பேர் எச்சரிக்கைபட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி