பெட்ரோலுக்கு சிக்கல்!! கையை விரித்தது அரசாங்கம்
பெட்ரோல் கப்பல் தாமதம்
இலங்கைக்கு வரவிருந்த 40 ஆயிரம் மெட்ரிக் தொன் பெட்ரோல் அடங்கிய கப்பல் மேலும் தாமதமடையுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த தாமதத்திற்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கோருவதாக கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களிடம் மன்னிப்பு கோரும் அரசாங்கம்
2) CPC was informed by the supplier, Petrol cargo confirmed to arrive yesterday was being delayed and will arrive Friday. Unfortunately CPC has been informed a further delay and a new date of arrival will be confirmed later today. I apologize for the delay and yesterdays update.
— Kanchana Wijesekera (@kanchana_wij) June 24, 2022
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோல் கப்பலின் வருகை தாமதமடைந்துள்ளமையால் அங்கு நெருக்கடிகள் மேலும் தீவிரமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
