மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாடு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாடு செயற்பாடுகள் முன்னெடுக்கப் பட்டு வருவதாகவும் மாவட்டத்தில் தேவையான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் J.S. அருள்ராஜ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
“விடுமுறை நாட்களில் பாவனை குறைவாக இருப்பதனால் அதிக எரிபொருள் விநியோகிக்கப்படுவதில்லை.
விடுமுறை நாட்கள்
இருப்பினும் பொதுமக்கள் அதிகமாக கொள்வனவில் ஈடுபட்டுள்ளதால் விடுமுறை நாட்களிலும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அவசரப்பட்டு வீணான சிரமங்களுக்கு முகம் கொடுத்து செயற்கையான தட்டுப்பாடை ஏற்படுத்த வேண்டாம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றிலிருந்து கடந்த காலத்தை போல் எரிபொருள் தட்டுப்பாடு விலையேற்றம் ஏற்படுமென பொதுமக்கள் சகல எரிபொருள் நிலையங்களிலும் வரிசைகளில் நின்று காத்திருப்பதை காண முடிகிறது.
காவல்துறையினர் இதற்கான பாதுகாப்பை வழங்கி வருவதுடன் பொது மக்களுக்கு வேண்டிய எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது.
இருப்பினும் கடந்த காலங்களில் ஏற்பட்டதை போல் எரிபொருள் தட்டுப்பாடு வந்துவிடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் தற்போது சகல எரிபொருள் நிலையங்களில் நீண்ட நேர வரிசையில் நிற்பதை காண முடிகின்றது” என தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி
யாழ்ப்பாணம் வடமராட்சியில் ஒரே ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மட்டும் இன்று எரிபொருள் நிரப்பப்படுகிறது.

பார்த்துத்துறை துறைமுகம் அருக்காமையில் உள்ள தனியார் எரிபொருள் நிரப்பும் நிலையம் இரவு பகலாக எரிபொருளை விநியோகம் செய்து வருகிறது.
ஏணைய குன்சர் கடை, நெல்லியடி, மந்திகை, வல்வெட்டித்துறை, கிராமகோடு ஆகிய எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் நிறைவடைந்துள்ளன.
எனினும் மக்கள் தாங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு எரிபொருள் நிரப்புவதற்காக நீண்டநேரமாக காத்திருக்கின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |


