வடக்கில் அரசபாதுகாப்பு தேடும் அருண்சித்தார்த்தும் ட்ரம்ப்பிடம் பாதுகாப்பு தேடும் தெற்கு பிக்குவும்
ஈரானில் இடம்பெறும் அரச எதிர்ப்பு போராட்டங்களில் இதுவரை 2,400 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமை அறிக்கையிட அதன் பின்னர் ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒரு முடிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டார்.
போராட்டக்காரர்கள் தொய்ந்து விடாமல் இருப்பதற்காக புதிய உசுப்பேற்றலை செய்த அவர் போராட்டக்காரக்ளுக்கு உதவ அமெரிக்க உதவி விரைவதாக சொல்லியுள்ளார்.
இந்த நிலையில் இலங்கையில் உள்ளுரில் இடம்பெறும் கல்விச்சீர்திருத்த்தை மைய்பபடுத்திய காச்சு மூச்சு பிரச்சனையில் ஜேவிபி முகங்களுடன் கடுமையாக தற்போது பொருதிவரும் மிஹிந்தலை ராஜமகா விஹாரையின் தலைமை விகாராதிபதியும் ஜேவிபின் லாந்காந்தாவினால் மிகிந்தலை காட்டுமிராண்டி என மறைமுகமாக குறிப்பிடப்பட்டவருமான தம்மரதன தேரர், ஜேவிபியால் இலங்கை அழிவதை தடுப்பதற்காக தான் ட்ரம்ப்பையும் சந்திக்கவும் தயாராக இருப்பதாகக் கூறி புதிய பரபரப்பு நாடகத்தை நடத்த தலைப்பட்டார்.
தெற்கில் இவ்வாறான புதிய நாடகங்கள் நடக்க யாழ்ப்பாணத்தில் தனது கட்சிப் பணியகம் நேற்று நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் தீயிடப்பட முனைந்ததாக வடக்கின் சர்ச்சைக்குரிய அரசியல் முகங்களில் ஒருவரும் அருண் சித்தார்த்தின் குறிப்பிட்ட இன்னொரு காட்சியும் வந்த நிலையில் இந்தவிடயங்களை மையப்படுத்தி வருகிறது செய்திவீச்சு..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |