தைப்பொங்கலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை
Thai Pongal
Sri Lankan Peoples
Srilanka Bus
Sri Lanka Transport Board
By Sathangani
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பிரதிப் பொது முகாமையாளர் டி.எச்.ஆர்.டி. சந்திரசிறி தெரிவித்தார்.
சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களின் பயணத்தை சுமுகமாக நடத்தும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலதிக பேருந்து சேவை
அந்தவகையில் ஹட்டன், நுவரெலியா மற்றும் பதுளை உள்ளிட்ட பல நகரங்களுக்கு மேலதிக பேருந்து சேவைகள் இயக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பஸ்டியன் மாவத்தை நெடுந்தூர பேருந்து முனையம் மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்து விசேட போக்குவரத்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி