“இராணுவத்தின் முக்கிய புள்ளி” யாழ்ப்பாணத்தில் கைது
arrest
jaffna
arun siththrdan
By Vanan
“இராணுவத்தின் முக்கிய புள்ளி” என தன்னை அழைத்துவரும் அருண் சித்தார்த்தன் நீதிமன்ற பிடியாணை மூலம் யாழ். காவல்துறையினரால் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இவர், ஊடகவியலாளர்களுடன் தகராற்றில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
நீதிமன்ற பிடியாணையுடன் காவல்துறையினர் இவரைக் கைது செய்யச் சென்ற போது, காவல்துறையினருடனும் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன், காவல்துறையினர் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயன்றதாகவும், “இராணுவத்தின் முக்கிய புள்ளி” தான் என மிரட்டியதாகவும், தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை “நல்லூர் கோவிலை இடித்து ஆலய சூழலில் பொது மலசல கூடம் அமைப்பேன்” என இந்து மதத்தை இழிவு படுத்தும் வகையில் முன்பு ஒரு தடவை, கருத்துக்களை இவர் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.