கொழும்பில் திடீர் துப்பாக்கிச்சூடு - காவல்துறையிடம் சிக்கிய முதல் ஆதாரம்
கொழும்பு - 15 முகத்துவாரம் பகுதியில் சற்றுமுன் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
முச்சக்கரவண்டியொன்றை இலக்கு வைத்து குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வாகனத்தில் வந்தவர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
விசாரணை

துப்பாக்கி சரியாக இயங்காத காரணத்தினால் இந்த துப்பாக்கிச்சூடு முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக அங்கிருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் சந்தேகநபர்கள் வாகனத்தை ஹிங்குருகொட சந்தியில் புதிய பாலத்தின் கீழ் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த வாகனத்தை கிராண்பாஸ் காவல்துறை கைப்பற்றியுள்ளதுடன், வாகனத்திலிருந்து டி56 துப்பாக்கியும், 9எம்எம் துப்பாகி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், முச்சக்கரவண்டியில் பயணித்தவர் இன்றைய தினம் வழக்கொன்றுக்காக செல்லவிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..


