அசாத் மௌலானா, முல்லைத்தீவு நீதிபதியை வெளிநாடுகளில் பின்தொடரும் உளவுத்துறை
சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகளை சர்வதேச அரங்கில் போட்டுடைத்த அசாத் மௌலானா மற்றும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் என தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறிச் சென்ற முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா ஆகிய இருவரையும் வெளிநாடுகளில் புலனாய்வாளர்கள் பின்தொடர்வதாக அரசியல் ஆய்வாளர் நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, அமரர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையில் தொடர்புடைய நபரென குற்றஞ்சாட்டப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட கஜன் மாமா என்று அழைக்கப்படும் ரங்கசாமி கனகநாயகத்திற்கு ஏற்பட்டது இயற்கை மரணமில்லை என்ற பகீர் தகவலையும் முன்வைத்துள்ளார்.
அவர் செவ்வி ஒன்றுக்கு நேர்காணல் வழங்க இருந்துள்ளதாகவும் இதனை தடுக்கும் முகமாக திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்