அஸாத் சாலிக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
Colombo
Court
SriLanka
Asad Sally
By Chanakyan
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று அவர் முற்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.