சஜித் தரப்பில் இருந்து வெளியேறினார் அசோக அபேசிங்க
By Dharu
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக அபேசிங்க, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் தாம் வகித்து வந்த அனைத்துப் பதவிகளிலிருந்தும் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவிற்கு அனுப்பி வைத்துள்ள உத்தியோகபூர்வக் கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, குருநாகல் தேர்தல் தொகுதியின் முதன்மை அமைப்பாளர் பதவி, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர், தொழிற்சங்க இணைப்புச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆகிய அனைத்துப் பதவிகளிலிருந்தும் தாம் விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்