சாமர சம்பத் தசாநாயக்கவுக்கு விளக்கமறியல்

Sri Lanka Politician Sri Lanka MP Chamara Sampath Dassanayake
By Pavi Oct 12, 2026 12:38 PM GMT
Report

புதிய இணைப்பு

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் கைதான நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்கவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று (12) பிற்பகல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் இணைப்பு

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் கைதான நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் சற்றுமுன்னர் முன்னிலைப்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

81 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

இதுதொடர்பில் இன்று வாக்குமூலம் வழங்க முன்னிலையாகியிருந்த சாமர சம்பத் தசநாயக்க சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

சாமர சம்பத் தசாநாயக்கவுக்கு விளக்கமறியல் | Today Chamara Sampath To Face Bribery Prob

சாமர சம்பத் தசாநாயக்கவுக்கு விளக்கமறியல் | Today Chamara Sampath To Face Bribery Prob

இரண்டாம் இணைப்பு

சாமர சம்பத் தசநாயக்க அதிரடி கைது! 

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

81 இலட்சம் ரூபாயை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

இதுதொடர்பில் இன்று வாக்குமூலம் வழங்க முன்னிலையாகியிருந்த சாமர சம்பத் தசநாயக்க சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாமர சம்பத் தசநாயக்க முன்னதாக கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகப் பதவியில் இருந்த காலத்தில் அவரது தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சுமதிபால லியனாராச்சி என்பவரும் இந்த விசாரணைகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாமர சம்பத் தசாநாயக்கவுக்கு விளக்கமறியல் | Today Chamara Sampath To Face Bribery Prob

முதலாம் இணைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று (12) காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது : இந்திய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கும் அநுர

கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது : இந்திய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கும் அநுர

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள்

81 ரூபாய் இலட்சம் இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

சாமர சம்பத் தசாநாயக்கவுக்கு விளக்கமறியல் | Today Chamara Sampath To Face Bribery Prob

குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக, கடந்த 09ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அன்றைய தினம் அவர் முன்னிலையாகாததால், அதற்குப் பதிலாக இன்று முன்னிலையாகவுள்ளதாக அறிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாமர சம்பத் தசநாயக்க, 2022 செப்டெம்பர் 08ஆம் திகதி முதல் 2024 செப்டெம்பர் 23ஆம் திகதி வரை ஆரம்பக் கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில், மூன்று நிறுவனங்களுக்கு முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் பொஸ்பேட் இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காக, அவரது அப்போதைய தனிப்பட்ட செயலாளர்  81 ரூபாய் இலட்சம் இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சிறையில் பௌத்த துறவிகளின் காவி ஆடை: புதிய விதிமுறைகளை வகுக்கிறது அரசாங்கம்.

சிறையில் பௌத்த துறவிகளின் காவி ஆடை: புதிய விதிமுறைகளை வகுக்கிறது அரசாங்கம்.

பொல்கஹவெல - பேராதனை இடையே இன்று முதல் புதிய தொடருந்து சேவை

பொல்கஹவெல - பேராதனை இடையே இன்று முதல் புதிய தொடருந்து சேவை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026