சஜித்தின் மூளையை பரிசோதனை செய்ய வேண்டும் - ரணில் தரப்பும் கடும் தாக்கு
srilanka
sajith
colombo
press meet
ashu marasinghe
By S P Thas
கொரோனாவை ஒழிப்பதற்காக அரசாங்கம் மாத்திரமல்லாது எதிர்க்கட்சியினரும் தமது அதிகாரத்தை சரியாக பயன்படுத்தவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றுசெய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
அரசாங்கம் மாத்திரமல்லாது எதிர்கட்சியும் கொரோனா ஒழிப்பை புறந்தள்ளி விட்டு, தமது அரசியல் நிகழ்ச்சி நிரலை மட்டுமே முன்னெடுத்து வருகின்றது.
தொற்று நோய் பரவிவரும் சந்தர்ப்பத்தில் தேர்தலை நடத்த வேண்டும் எனக் கூறிய எதிர்க்கட்சித் தலைவரின் மூளையை பரிசோதிக்க வேண்டும்.
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை மாற்றுவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்றார்.
கிருசாந்தி படுகொலை செய்யப்பட்ட இன்றைய நாளே செம்மணி இனப்படுகொலை தினம்…! 29 நிமிடங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்