ஆசிய கிண்ணத் தொடர் : சூப்பர் 4 சுற்றில் முதல் வெற்றியை ருசித்தது பாகிஸ்தான்
ஆசியக் கிண்ணத் தொடரின் இன்று இடம்பெற்ற சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றதுடன் பாகிஸ்தான் அணியை தொடர்ந்து வீழ்த்தி வெற்றியை ருசித்து வந்த பங்களாதேஷ் அணிக்கும் பதிலடி கொடுத்துள்ளது.
பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி,பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் 38 ஓவர்கள் 04 பந்துகள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 193 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
பங்களாதேஷ் அணி சார்பாக முஷ்பிகுர் ரஹிம் 64 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஷகிப் அல் ஹசன் 53 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் நசீம் ஷா 03,ஹரீஸ் ரவூப் 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
194 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி
194 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 39 ஓவர்கள் 3 பந்துகளில் 3 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் இமாம் ஹுல் ஹக் அதிகபட்சமாக 78 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். அதேபோல், மொஹமட் ரிஷ்வான் ஆட்டமிழக்காது 63 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
போட்டியின் ஆட்டநாயகனாக
போட்டியின் ஆட்டநாயகனாக 04 விக்கெட்டுக்களை கைப்பறிய ஹரீஸ் ரவூப் தெரிவினார்.
சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.