ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை அணி - நாமலுக்கு பதிலடி
SJB
Namal Rajapaksa
Sri Lanka Cricket
Asia Cup 2022
By Sumithiran
இலங்கை அணியின் ஆசிய கிண்ண வெற்றி
இலங்கை அணியின் ஆசிய கிண்ண வெற்றிக்கு நாமல் ராஜபக்ச தான் காரணம் என கூறுவது நகைச்சுவை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்,
நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமில்லை
இலங்கை அணியின் வெற்றியின் பெருமை நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமில்லை, அது கிரிக்கெட் வீரர்களுக்கே உரித்தானது எனத் தெரிவித்தார்.
இதேவேளை தான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவேளை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே தற்போது இலங்கை அணி ஆசிய கிண்ணத்தை வெல்ல காரணம் என நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்