அரசு அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு
Government Employee
Sri Lanka
Bribery Commission Sri Lanka
By Jaso
இந்த ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்பு விவரங்களை எதிர்வரும் ஜூன் 30-ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு இலஞ்ச ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
சொத்து மற்றும் பொறுப்பு விவரங்களை டிஜிட்டல் முறையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்
ஜூன் மாதத்தின் கடைசி நாட்களில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகள் இந்த அமைப்பை அணுகுவதால் நெரிசல் ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஜூன் 30-ஆம் திகதிக்குப் பிறகு சொத்து மற்றும் பொறுப்பு விவரங்களைச் சமர்ப்பிப்பவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று ஓர் அதிகாரி தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி