பூமியை நெருங்கும் எரிகற்கள்... எச்சரிக்கும் நாசா!
விண்வெளியிலிருந்து இரண்டு எரிகற்கள் பூமியை நோக்கி வருவதாகவும் அதானால் பூமிக்கு ஏற்படவுள்ள விளைவுகள் குறித்தும் நாசா விண்வெளி ஆய்வு மையம் (NASA) எச்சரித்துள்ளது.
அதன்படி, இந்த இரண்டு எரிகற்களும் வெவ்வேறு கூட்டத்திலிருந்து வருவதாகவும், வெவ்வேறு வேகத்தில் வந்துகொண்டிருப்பதாகவும் கூறப்படுகிற அதேவேளை இந்த எரிகற்களால் பூமிக்கு ஆபத்து ஏற்படுமா? என்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் நாசா விவரித்துள்ளது.
முதல் எரிகல்லுக்கு 2024HK1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலமானது அப்பல்லோ (Appollo) எரிகல் குடும்பத்தைச் சேர்ந்தது. என்றும், இது அண்ணளவாக 99 அடி (30.14 மீற்றர்கள்) நீளம்கொண்டது என்றும் கூறப்படுகிறது.
அமோர் எரிகல்
அதாவது, ஒரு வணிக விமானம் அளவுக்கு பெரியதாக இருக்கும் இந்த எரிகல்லானது, மணிக்கு 31,114 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிப்பதாக கூறப்படுகிறது.
இரண்டாவது எரிகல்லுக்கு 2024JE எனப் பெயரிடப்பட்டுள்ளது, இது அமோர் எரிகல் என அடையாளம் காணப்பட்டுள்ளது, அதாவது இந்த எரிகல்லானது அப்பல்லோ குழு எரிகல்லைப் போல அல்லாமல், பூமியின் வட்டப்பாதையிலிருந்து வெளியிலிருந்து வந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதன் அளவு 165 அடி (50 மீற்றர்) என கணக்கிடப்பட்டுள்ளது, இதுஅளவில் மிகப்பெரியதாக காணப்படும் அதேவேளை மணிக்கு 27,926 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கிறது.
பூமிக்கு அச்சுறுத்தல்
அளவில் மிகப்பெரியதாக காணப்படும் இந்த எரிகற்கள் இரண்டும் பூமிக்கு மிகத் தொலைவில் கடந்து செல்வதனால் பூமிக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்று நாசா விளக்கம் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் நாசா தொடர்ந்து எரிகற்களை கண்காணித்து வருவதாகவும், பூமிக்கு ஏதேனும் அச்சுறுத்தலை ஏற்படுத்துமோ என்று எப்போதும் கண்காணிப்பிலேயே இருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |