இன்று வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்
ஜனவரி மாதத்திற்கான அஸ்வெசும உதவித் தொகை தொடர்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் உள்ள பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகளும் இரு கட்டங்களுக்குமான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவுகளும் இன்று (28) அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்
குறித்த விடயத்தை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஒதுக்கபட்டுள்ள நிதி
அதன்படி, முதலாம் கட்டத்தின் கீழ் 1,415,584 பயனாளி குடும்பங்களுக்கு 11,234,713,750.00 ரூபாய் நிதி வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.

மேலும் முதலாம் கட்டத்தின் கீழ் ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவாக 618,440 பயனாளிகளுக்கு 3,092,200,000.00 ரூபா நிதி வரவு வைக்கப்படவுள்ளது.
மேலும் இரண்டாம் கட்டத்தின் ஜனவரி மாதக் கொடுப்பனவாக 248,454 பயனாளி குடும்பங்களுக்கு 2,235,137,500.00 ரூபா நிதி அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.
இரண்டாம் கட்டத்தின் கீழான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவாக 68,183 பயனாளிகளுக்க 340,915,000.00 ரூபா நிதி அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |