மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: இன்று வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்
ஒக்டோபர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பயனாளிகளின் வங்கிப் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை நலன்புரி நன்மைகள் சபை வெளிட்டுள்ளது.
இதற்கமைய,, 2026 ஒக்டோபர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவுகள் இன்று (14) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளன.
வரவு வைக்கப்படவுள்ள பணம்
அதேவேளை, அஸ்வெசும முதலாவது கட்டத்தின் கீழ் 985,283 பயனாளிக் குடும்பங்களுக்கு 9.12 பில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது.

இரண்டாவது கட்டத்தின் கீழ் 212,445 பயனாளிக் குடும்பங்களுக்கு 2.04 பில்லியன் ரூபா வைப்புச் செய்யப்படவுள்ளது.
இதன்படி, இரண்டு கட்டங்களின் கீழும் மொத்தம் 1,197,728 பயனாளிக் குடும்பங்களுக்கு 11.16 பில்லியன் ரூபா நிதி வழங்கப்படவுள்ளது.
குறித்த பயனாளிகள் நாளை (14) முதல் தங்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாக இந்தக் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |