மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: இன்று வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்
Sri Lankan Peoples
Ministry Of Public Security
Low Income
Aswasuma
By Thulsi
அஸ்வெசும கொடுப்பனவுக்கு தகுதி பெற்ற பயனாளிகளின், ஒகஸ்ட் மாதத்துக்கான உதவித்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.
வங்கிக் கணக்குகளில் வரவு
அந்தவகையில், 2025 ஓகஸ்ட் மாதத்திற்கான உதவித்தொகை இன்று (15) அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, மொத்தம் 1,421,745 பயனாளி குடும்பங்களின் கணக்குகளில் 11,275,973,750 ரூபாய் வரவு வைக்கப்படவுள்ளது.
பயனாளிகள் தங்களுக்குச் சேர வேண்டிய உதவித்தொகையை இன்று முதல் தங்களது அஸ்வெசும பயனாளி வங்கிக் கணக்குகளில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்