குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்
நாட்டிலுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவு குறித்து 2026 ஆம் ஆண்டு மீண்டும் மீளாய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2030 ஆம் ஆண்டுக்குள் கடனை 87 சதவீதமாக குறைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று (07) நடைபெறும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் மீண்டும் பொருளதார நெருக்கடி ஏற்படும் என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை. பொருளாதாரம் ஸ்திரத்தன்மையில் இருக்கிறது.
அரச நிறுவனங்கள் மற்றும் அரச சேவைகள் மீது மக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அரச வருமானம் 16 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கின்றோம்.
கடன் நெருக்கடியில் இருந்து மீட்டெழுப்பதற்கு பல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் கடன் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முடியும் 2032 ஆம் ஆண்டு தேசிய உற்பத்திக்கு சமமாக கடனை 90 வீதம் குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |