இவ்வாண்டின் இறுதிக்குள் பொருளாதாரம் மீட்சி: ஜனாதிபதி உறுதி!
இவ்வாண்டின் இறுதிக்குள் இலங்கையின் நெருக்கடிக்கு முந்தைய பொருளாதாரத்தை மீட்டெடுக்க தனது அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2029 ஆம் ஆண்டுக்குள் 2019 ஆம் ஆண்டு நாட்டில் காணப்பட்ட பொருளாதார நிலைகளுக்குத் திரும்புவோம் என முந்தைய அரசியல் தலைவர்கள் கணித்திருந்தாலும் கூட இவ்வாண்டின் இறுதிக்குள் பொருளாதாரத்தை பழைய நிலைக்கு மீட்ட முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையை ஜனாதிபதி தற்போது நிகழ்த்தி வருகிறார்.
அரசாங்கத்தின் நோக்கம்
குறித்த உரையிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் பணவீக்கத்தை 5 வீதத்துக்கும் குறைவாக வைத்திருப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
அந்நியச் செலாவணி நிலைகள் நிலையானதாகவும், ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு பணம் அனுப்புதல் இரண்டும் வலுவாக இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிபீடமேறிய பின்னர் இரண்டாவதாக முன்வைக்கும் வரவு செலவு திட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |