புதிதாக மேலும் பல குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு : கிடைத்தது அனுமதி
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Money
Aswasuma
By Sumithiran
அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 23,775 பயனாளி குடும்பங்களுக்கு நிதி மானியம் வழங்குவதற்கான திட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
ஒரு குடும்பத்திற்கு ரூ.150,000 வரை இருக்கும் இந்த மானியம், வணிக அல்லது வேலைவாய்ப்புத் திட்டங்கள் மூலம் ஏழை மற்றும் மிகவும் ஏழ்மையான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உறுதுணை புரியும்.
மூன்று வருட செயற்றிட்டம்
2025 முதல் 2027 வரையிலான இந்த திட்டம் 143 பிரதேச செயலகங்களில் உள்ள 839 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கியது.
ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கியின் ஆதரவுடன் கூடிய முன்னோடித் திட்டங்களுடன், இந்த சமூகப் பிரிவுகளில் உள்ள 1.2 மில்லியன் குடும்பங்களை மேம்படுத்தும் பணியை சமுர்த்தி மேம்பாட்டுத் திணக்களம் கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி