இலங்கையில் ஒரே நேரத்தில் திருமணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 19 ஜோடிகள்!
இலங்கையில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 19 தம்பதிகள் திருமண செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம், இலங்கையின் யட்டிநுவர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
யட்டிநுவர பிரதேச செயலகத்தினால் குறித்த திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிகள்
குறித்த குடும்பத்தில் உள்ள தாய் - தந்தை, பாட்டி- தாத்தா மற்றும் மகள் - மருமகள் ஆகியோரே இவ்வாறு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ளாதவர்களுக்கே இந்த விஷேட திருமணம் ஏற்பாடு யட்டிநுவர பிரதேச செயலகத்தால் செய்யப்பட்டுள்ளது.
குறித்த திருமணங்களுக்கான காரணம்
குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்குவதில் காணப்பட்ட திருமண சட்ட சிக்கல்களை தீர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஊழியர் நலன் தொடர்பான நிதி பெறுவதில் உள்ள பிரச்சனைகளை தீர்க்கவும் குறித்த திருமணம் நடத்தப்பட்டது.
குறித்த திருமணங்களுக்கான சாட்சிகளாக கண்டி மாவட்ட செயலாளரும் யட்டிநுவர பிரதேச செயலாளரும் கையொப்பமிட்டுள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்

