அரசு ஊழியருக்கு எதிராக கடும் நடவடிக்கை - எச்சரிக்கும் பிரதி அமைச்சர்
தவறு செய்யும் அரச ஊழியர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதியமைச்சர் சுனில் வடகல (Sunil Watagala) எச்சரித்துள்ளார்.
தனியார் வானொலியொன்றின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வடகல மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், காவல் திணைக்களத்தில் தற்போதைக்கு 21 ஆயிரம் வெற்றிடங்கள் நிலவுகின்றன.
தவறு செய்யும் அரச ஊழியர்கள்
ஆயினும் அதனைக் கருத்திற்கொள்ளாது தவறு செய்த 300 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோன்று தவறு செய்யும் அரச ஊழியர்கள் எவராக இருப்பினும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அரசியல்வாதிகள் , அதிகாரிகள் , பொதுமக்களை இணைக்கும் செயற்திட்டமொன்று விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிரதி அமைச்சர் சுனில் வடகல தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
அழகுப்படுத்தும் நிலையங்களுக்கு சம்பளப் பணம்
இதேவேளை, அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் அதிகரிப்படுவது தொடர்பில் வாக்குறுதி வழங்க முடியாது என கமத்தொழில் கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச் சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் எவ்வாறு இருந்தது என்று தெரியாது. ஆனால் இன்று அதிகரிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். ஏனென்றால் அதிகரிக்கப்படும் சம்பளப் பணம் அழகுப்படுத்தும் நிலையங்களுக்கு மதுபானசாலைகளுக்கு செல்கிறது.
நாட்டில் பணப் புரள்வு நடைபெற வேண்டும். அப்போது தான் பொருளாதாரம் உயர்வடையும். ஆகையால் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். தொழிற்சங்க நிகழ்வுகளில் உரையாற்றும் போது பயமாகத்தான் இருக்கிறது.
இப்போது நான் அமைச்சராக இருக்கிறேன். ஆனால் எனது தொழிற்சங்கத் தலைமைப் பதவி மற்றும் அமைச்சு ஆகிய இரண்டையும் பாது காத்து கொண்டு செல்ல வேண்டியுள்ளது என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்

