உக்ரைனின் தாக்குதலால் கதிகலங்கிய ரஷ்யாவின் அதி நவீன எஸ்யு-57 போர் விமானம்
Russo-Ukrainian War
World
Russia
By Dhilak
ரஷ்யாவின் (Russia) அதி நவீன எஸ்யு-57 ரக போர் விமானத்தை குறி வைத்து உக்ரைன் (Ukraine) ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
குறித்த தாக்குதலினால் அந்த விமானம் பலத்த சேதமடைந்துள்ளதாக உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இது தொடர்பான செயற்கை கோள் புகைப்படங்களை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
டிரோன்கள் தாக்குதல்
தெற்கு ரஷ்யாவில் உக்ரைன் எல்லையை ஒட்டிய ஆஸ்திராகான் மாகாணத்தில் அக்துபின்ஸ்க் விமான தளம் அமைந்துள்ளது.

அதன்படி, உக்ரைனின் எல்லையில் இருந்து 589 கிமீ தொலைவில் உள்ளதால் ட்ரோன் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்